விவேகம்: தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச த்ரில்லர் படம். சிவா

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் முதல் காட்சி இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் சிவா இந்த படம் குறித்து சில அரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
'விவேகம்' திரைப்படம் தமிழ் சினிமவின் முதல் சர்வதேச ஸ்பை த்ரில்லர் படம். கிராமிய படமான 'வீரம்' மற்றும் நகரப்படமான 'வேதாளம்' ஆகிய படங்களை அடுத்து தற்போது சர்வதேச ஸ்பை த்ரில்லரை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளோம். அஜித்தின் ஆலோசனையின்படி இந்த படத்தை உண்மையிலேயே சர்வதேச தரத்துடன் முடித்துள்ளோம். இந்த படத்தின் திரைக்கதைக்காக நாங்கள் நான்கு மாதங்கள் உழைத்துள்ளோம். இந்த படத்தில் செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் சம அளவில் கலந்துள்ளன.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் பல்கேரியா, சைபீரியா, குரோஷியா, சால்வேனியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அஜித் இந்த படத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாக, நேர்மையாக உழைத்தார். இந்த படத்தில் மூன்று பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் உள்ளது. பொதுவாக அஜித் டூப்களை விரும்ப மாட்டார். எவ்வளவு ரிஸ்க்கான காட்சியிலும் அவரேதான் நடிக்க முன்வருவார். குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சியில் அவர் எடுத்த ரிஸ்க்கை பார்த்து ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனரே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். அந்த காட்சியை அதிக அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நடிக்க முடியும். அஜித் ஜிம்முக்கு சென்று உடல்கட்டுப்பாட்டுடன் இருந்ததால் அவரால் அந்த காட்சியில் திறம்பட நடிக்க முடிந்தது
அவருடைய கடுமையான உழைப்புதான் இன்று திரையில் விருந்தாக வெளிவரவுள்ளது. 'விவேகம்' டீமில் உள்ள ஒவ்வொருவரின் அதிகபட்ச உழைப்பு இந்த படத்தில் இருந்ததால்தான் மிகச்சிறப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. நிச்சயம் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை

More News

யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளில் அஞ்சலி படக்குழுவினரின் அதிரடி கொண்டாட்டம்

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வருவதை அடுத்து அவர் இசையமைத்துள்ள 'பலூன்' படக்குழுவினர் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு மட்டுமின்றி இசைத்துறையிலும் ஈடுபட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே 'அடங்காதே', '4G', 'ஐங்கரன்', 'நாச்சியார்', 'செம', '100% காதல்', போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

அஜித் ஒரு இண்டீரியர் டிசைனர் என்பது யாருக்காவது தெரியுமா?

அஜித் ஒரு நடிகர், போட்டோகிராபர், பிரியாணி பிரியர், பைக் ரைடர் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த இண்டீரியர் டிசைனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை...

நடிகை ராதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் காயத்ரியை இன்னும் ஓவியா ஆர்மியினர் மன்னிக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை.