அஜித் படங்களை தொடர்ச்சியாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? இயக்குனர் சிவா
Thursday, June 29, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
'வீரம்', 'வேதாளம்' வெற்றி படங்களை அடுத்து அஜித்தின் 'விவேகம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிவா, ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் அஜித் படங்களை தொடர்ச்சியாக இயக்கிய வாய்ப்பு தனக்கு கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கியுள்ளார்.
தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதற்கு முக்கிய காரணம் அஜித் உழைப்பின்மேல் நான் வைத்துள்ள மரியாதையும், என் உழைப்பின் மேல் அவர் வைத்திருக்கும் மரியாதைதான் என்று கூறிய சிவா, இந்த காம்பினேஷன் தொடர இது ஒன்று மட்டுமே காரணம் என்றார். மேலும் ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன் அஜித்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று 100 முறையாவது யோசிப்பேன் என்றும், காட்சியை உறுதி செய்த பின்னர் அவரிடம் சில ரிஸ்க்கான காட்சியை தயங்கி தயங்கி விவரிக்கும்போது 'பயப்படாதீங்க, நானே பண்ணிடறேன், எனக்கு ஒண்ணும் ஆகாது என்று நான் மனதில் நினைத்ததை அவர் கூறுவதும், என்னை முழுமையாக புரிந்து கொண்டு மனபலத்துடன் நடிப்பதும்தான் எங்களுக்குள் உள்ள ஒற்றுமை' என்று சிவா கூறினார்.
உடல் பலமும் மன பலமும் அவருக்கு இருக்கின்றது என்ற என் நம்பிக்கை மீது அவர் வைத்துள்ள பரஸ்பர புரிதல்லதான் திரும்பத் திரும்பப் படங்கள் பண்ணுவதற்கு காரணம். இது அனைத்திற்கும் மேல் கடவுள் நம்பிக்கை. இந்த ரெண்டும் இருக்கும்போது நிச்சயம் நமக்கு எந்த விதமான பிரஷரோ, மனஸ்தாபமோ, தடையோ, சண்டையோ வராது. பாசிட்டிவ்வா இருப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும்னு நம்புவோம்' என்று இயக்குனர் சிவா கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment