ரிலீசுக்கு முன்பே ரூ.120 கோடி வசூல்: சாதனை செய்த அஜித்தின் 'விவேகம்'

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி அந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே ரூ.120 வியாபாரம் ஆகி அஜித்தின் 'விவேகம்' புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இரண்டரை மணி நேரத்தில் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகியது என காசி திரையரங்கின் உரிமையாளர் கூறியதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் ஒரே நாள் இரவில் விவேகம் படத்திற்கான 15000 டிக்கெட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக அபிராமி திரையரங்கின் உரிமையாளர் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சாதனை நினைத்து கூட பார்க்க முடியாத கற்பனைக்கும் எட்டாத சாதனை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'விவேகம்' படத்தின் ரிலீசுக்கு முந்தைய சாதனை மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ள நிலையில் இந்த படத்திற்கு ரிசல்ட் பாசிட்டிவ் ஆக இருந்தால் நிச்சயம் இந்த படம் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.