close
Choose your channels

அஜித்திடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது: 'விவேகம்' கலை இயக்குனர் மிலன்

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு சர்வதேச உளவாளி படத்தை சர்வதேச தரத்துடன் காட்சியில் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லை. சர்வதேச தரத்தை கொண்டுவர கதைக்கு தகுந்தவாறும் கேரக்டர்களுக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப கலைஞர்களின் அதிகபட்ச உழைப்பு தேவைப்படும். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான சர்வதேச தரமுள்ள படத்திற்கு கலை இயக்கம் மிக முக்கியம். அந்த வகையில் 'விவேகம்' படத்தின் கலை இயக்குனர் இந்த படத்திற்காக எடுத்த புதிய முயற்சிகள், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:
'விவேகம்' படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமை படும் படமாக இது இருக்கும்.
கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது . சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன்.
உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். 'விவேகம்' படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் "விவேகம்" பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்'
இவ்வாறு 'விவேகம்' கலை இயக்குனர் மிலன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment