'விவேகம்' முன்பதிவில் புதிய சாதனை: சென்னை காசி திரையரங்க உரிமையாளர்

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

தல அஜித்தின் விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுக்கள் மின்னல் வேகத்தில் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. முதல் நாள் மட்டுமின்றி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நான்கு நாட்களிலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகளின் விற்பனை முடிந்துவிட்டது.

இந்த நிலையில் அஜித்தின் கோட்டை என்று கூறப்படும் காசி திரையரங்கின் உரிமையாளர் சுப்பிரமணியம் அவர்கள் விவேகம் டிக்கெட் விற்பனை குறித்து கூறியபோது, 'முன்பதிவு ஆரம்பித்த இரண்டரை மணி நேரத்தில் 4 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், தங்களது திரையரங்கில் இதுவொரு புதிய சாதனை என்றும் கூறியுள்ளார்.

முன்பதிவு தகவல்களை வைத்து பார்க்கும்போது 'விவேகம்' படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.