close
Choose your channels

அஜித்தின் விசுவாசம்: ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் டைட்டில் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்தும், மற்ற அப்டேட்டும் இல்லாதது குறித்து அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு தற்போது டபுள் சந்தோஷம் தரும் வகையில் விசுவாசம் படத்தின் இரண்டு அப்டேட்டுக்கள் வெளிவந்துள்ளது.

ஒன்று இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் ஆகும்

இன்னொன்று இந்த படம் ஜூலையில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதி என்ற செய்தியும் ஆகும். கட்ந்த 2015 தீபாவளி தினத்தில் 'வேதாளம்' வெளிவந்தது போல் 2018 தீபாவளி விருந்தாக 'விசுவாசம்' வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே தீபாவளி தினத்தில் தளபதி விஜய்யின் 'விஜய் 62' மற்றும் சூர்யாவின் 36வது படம் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி, தல, தளபதி, சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment