அஜித்துக்கு முதல்முறை, நயனுக்கு 3வது முறை: விசுவாசம் அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

தல அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஜித்துடன் நான்காவது முறையாக இணையவுள்ள இந்த படம் ஒரு திகில் படம் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி உண்மையெனில் அஜித் நடிக்கும் முதல் திகில் படம் இதுதான். அஜித் இதுவரை ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் படங்களில் மட்டுமே அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது. ஆனால் நயன்தாரா இதற்கு முன்னர் மாயா மற்றும் டோரா ஆகிய இரண்டு திகில் படங்களில் நடித்துள்ளாதால் 'விசுவாசம்' அவருக்கு 3வது திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கதை கிராமம் ஒன்றில் ஆரம்பித்து சென்னையில் முடியும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள முன்னணி ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் இயக்குனர் சிவா ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை ஸ்ரீதேவி: துபாயில் மரணம், மும்பையில் தகனம், தமிழகத்தில்....?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்'றி ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.

தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு

சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி மிக வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.

ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்கள் தளபதியிடம் வாழ்த்து பெற்ற விஜே

சன் டிவி விஜே மணிமேகலை படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது 'ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்க' என்று விஜய், மணிமேகலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் மகளை மணக்கும் 'விக்ரம் வேதா' நடிகர்

நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான சஞ்சனாவுக்கும் வரும் 4ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டில் தடம் பதிக்கும் 'தடம்'

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.