சூர்யா 39' படத்தின் இணைந்த 'விஸ்வாசம்' குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'சூர்யா 39' திரைப்படத்தின் புத்தம் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் சூர்யா 39' படத்தில் இசையமைப்பாளராக டி இமான் அவர்களும் ஒளிப்பதிவாளராக வெற்றி அவர்களும் படத்தொகுப்பாளராக ரூபன் அவர்களும், சண்டை பயிற்சியாளராக திலிப் சுப்பராயன் அவர்களும் கலை இயக்குனராக மிலன் அவர்களும் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவா இயக்கிய முந்தைய படமான 'விஸ்வாசம்' படத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவின் 'காப்பான்' திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும், அவர் நடித்து கொண்டிருக்கும் 'சூரரை போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Sai Sai ??
— Studio Green (@StudioGreen2) August 12, 2019
Here is the rocking team of Technicians who will be associated with the massive #Suriya39! @Suriya_offl @directorsiva @immancomposer @vetrivisuals #DileepSubbarayan @AntonyLRuben #ArtDirectorMilan pic.twitter.com/y8dZEerYLJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments