அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு: விஸ்வாசம் சிங்கிள் பாடல் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரல் புயல் வீசி வருகிறது. இமான் இசையமைப்பில் இமான், ஆதித்ய காந்தவி, நாராயணன் குரலில் வெளிவந்துள்ள அட்டகாசமான இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் அறிமுகப்பாடல் என்று கருதப்படும் இந்த பாடலில் அஜித் வயதான தோற்றத்தில் கம்பீரமாக தோன்றுகிறார். அஜித்தின் முந்தைய பாடல்களான அட்டகாசம்' படத்தில் இடம்பெற்ற 'தெற்கு சீமையில' மற்றும் 'மங்காத்தா' படத்தில் இடம்பெற்ற 'இது அம்பானி பரம்பரை' பாடல்களின் வரிசையில் செம குத்து பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடல் திரையில் தோன்றும் போது தியேட்டரே அதிரடியாக மாறும் என்பது உறுதி

தடபுடலாக வரும் தன்மான படைபலம்
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கொண்டாடுது

போன்ற வரிகள் திரையில் தோன்றும்போது தாரை தப்பட்டை கிழியப்போவது நிஜம். குறிப்பாக 'வந்தாண்டா மதுரைக்காரன்' என்று அஜித் மீசையை முறுக்கி கொண்டே பாடும்போது அஜித் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகம் அடைவார்கள் என்பது உறுதி

நான் நினைச்சது எல்லாம் ஒவ்வொண்ணா நல்லா நடக்குது
மேல் இருக்குற மேகம் ஓயாம பூ'தூவுது என்மேல
அட கருவா நீ போகுறா தண்டனக்கரா மத்தியில் கொஞ்ச நாளு
செம சீனா சிதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு,

என்ற வரிகளின்போது உண்மையிலேயே ரசிகர்கள் தியேட்டரை சிதற வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மொத்தத்தில் முதல் பாடலே செம குத்து பாடலாக வெளிவந்துள்ளதுள்ளதால் இத்தனை நாள் பொறுமை காத்த அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது.