'விஸ்வாசம்' படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இனிவரும் நாட்களில் இரவுபகலாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த தினமே இதன் வியாபாரமும் தொடங்கிவிட்டது. பிரபல நடிகரும் தயாரிப்பாளரும், விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். இதுகுறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்,.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் அஜித் நடித்துள்ள இந்த படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
We are happy to announce #Viswasam Overseas release by Arun Pandian @kav_pandian of @AandPgroups@directorsiva @SureshChandraa @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @DoneChannel1#ViswasamThiruvizha #Pongal2019
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) November 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments