அஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டர் என்ற சமூக வலைத்தளம் கிட்டத்தட்ட அஜித் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது என்றே சொல்லலாம். அஜித் படத்தின் அறிவிப்பு வெளிவரும்போதும், அவருடைய படங்களின் புரமோஷன்களின்போதும், பட ரிலீசின்போதும் டுவிட்டர் அஜித் ரசிகர்களால் தெறிக்கும். அஜித் படங்களுக்கு என தனியாக புரமோஷன்கள் தேவையில்லை என்றும், டுவிட்டர் ரசிகர்கள் போதும் என்பதும் பலரது கருத்து.
இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள் உள்ளன.
இந்த ஆண்டின் மிக பிரபலமான ஹேஷ்டேக்காக விஸ்வாசம் ஹேஷ்டேக் தேர்வு செய்யப்பட்டதற்கு படக்குழுவினர் குறிப்பாக சத்யஜோதி பிலிம்ஸ், டி.இமான் உள்ளிடோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோல் 2020ஆம் ஆண்டு அஜித்தின் அடுத்த படமான ’வலிமை’ ஹேஷ்டேக் முதலிடம் பிடிக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
#Ajith sir fans, you guys prove your #Viswasam and #Valimai yet again. Thank you for making this big.
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) November 12, 2019
Thank you @TwitterIndia @MomentsIndia. #Launch2020 ???? pic.twitter.com/UxrwOc5Ax8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments