தல அஜித்தின் 'விசுவாசம்' குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

தல அஜித்துடன் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணையும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக பெரும் பொருட்செலவில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் 'விசுவாசம்' திரைப்படம் ஒரு ஹாரர் திகில் திரைப்படம் என்றும் அஜித் நடிக்கும் முதல் திகில் படம் இதுதான் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

'விசுவாசம்' திரைப்படம் திகில் படம் இல்லை என்றும், இந்த படம் ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்றும், தல ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.

அஜித், நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் எப்போது? புதிய அறிவிப்பு

கடந்த பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஒருசில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

எச்.ராஜாவிற்கு இதைவிட வேறு அவமானம் தேவையா?. நெட்டிசன்கள் கிண்டல்

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.

'காலா' குழுவினர்களுக்கு நானாபடேகர் கொடுத்த ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

எச்.ராஜாவை வெளுத்து கட்டிய குஷ்பு

இன்று காலை முதல் ஊடகங்களுக்கு கிடைத்த பரபரப்பான தீனி, எச்.ராஜா தனது முகநூலில் பதிவு செய்த பெரியார் சிலை குறித்த கருத்துதான். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக

இரு இமயங்களை சமாளிப்பாரா ரஜினி? விவேக் கூறியதன் உள்ளர்த்தம் என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துவிட்டு பேசிய நீண்ட உரை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.