மீண்டும் சாதனை செய்த 'விஸ்வாசம்': அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பு நிறுவனம்

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

அஜித், நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஏற்கனவே பல சாதனை செய்திருக்கும் நிலையில் தற்போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. அதில் 'விஸ்வாசம்' ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் ஆகியவற்றைவிட 'விஸ்வாசம்' ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் டுவிட்டர் குறிப்பிடப்பட்டுள்ளது

டுவிட்டர் இன்று ஹேஷ்டேக் தினம் கொண்டாடி வருவதை அடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மீண்டும் 'விஸ்வாசம்' ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டிலும் விஸ்வாசம் ஹேஷ்டேக்தான் முதலிடம் பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஒரு படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தில் இருப்பது அஜித் ரசிகர்கள் டுவிட்டரை ஆதிக்கம் செய்து வருகின்றனர் என்பதை நிரூபித்துள்ளது

'விஸ்வாசம்' ஹேஷ்டேக் இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நன்றி தெரிவித்துள்ளது