close
Choose your channels

விஜய் பிறந்த நாளில் அஜித் செய்ய போவது என்ன தெரியுமா?

Tuesday, June 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் பத்தே நாட்களே உள்ளது. விஜய்யின் இந்த ஆண்டு பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய்யோ, தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் சோகம் காரணமாக இந்த ஆண்டு தான் பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல் அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு மும்பை அல்லது சென்னையில் நடைபெறும் என தெரிகிறது.

ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துவிட்ட நிலையில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே மீதமிருப்பதாகவும் இந்த இரண்டுகட்ட படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, காலிராணி, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வரும் தீபாவளி திருநாளில் வெளியிட அனைத்து முயற்சிகளையும் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment