'விஸ்வாசம்' படத்தின் சென்சார் தகவல்: பொங்கல் ரிலீஸ் உறுதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கனவே பலமுறை உறுதி செய்த நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்யஜோதி பிலிம்ஸ்' உறுதி செய்துள்ளது.
'வேதாளம்' படத்திற்கு பின் மீண்டும் அஜித் நடித்த படம் 'யூ' சான்றிதழ் பெற்ள்ளது என்பதும், அஜித்தின் முந்தைய படமான 'விவேகம்' திரைப்படம் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த படம் ஜனவரி 10 அல்லது ஜனவரி 15 ஆகிய தேதிகளில் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ள இந்த படத்தின் டீசரில் அதிகார்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Viswasam will be a 'U'niversal Family Entertainer.#ViswasamCensoredU #ViswasamPongal2019
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 24, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments