close
Choose your channels

தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி: 'விஸ்வாசம்' செய்த சாதனை!

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த வாரம் ஞாயிறுக்குள் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என்று பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பேட்டில் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று வரை 'விஸ்வாசம்' திரைப்படம் ரூ.125 கோடி வசூலை கடந்துவிட்டதாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூலை கடந்த முதல் படம் என்ற சாதனையை 'விஸ்வாசம்' பெற்றுள்ளது.

இதுகுறித்து 'விஸ்வாசம் ரூ.125 வேட்டை' என்ற வாசகத்துடன் கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி 'விஸ்வாசம்' ரூ.200 கோடி வசூலை நோக்கி வெற்றி நடைபோட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேற லெவல் வெற்றிக்கு உதவிய அங்காளி, பங்காளிகள் மற்றும் விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி என்றும், கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

ஒரே நாளில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இனி சோலோ ரிலீஸ் செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலை தமிழ் சினிமாவுக்கு இல்லை என்றும் இதன் மூலம் தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment