'விஸ்வாசம்' சாதனையை யாராலும் மறைத்துவிட முடியாது: பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த படம் செய்த வசூல் சாதனையை அஜித்தின் அடுத்த படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தால் கூட முறியடிக்க முடியவில்லை. இந்த ஆண்டில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடிக்க இன்னொரு படம் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து 8 நாட்களில் ரூ.125 கோடி வசூல் செய்ததாக அறிவித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது’ என்று பதிவு செய்துள்ளது. இந்த டுவீட் கடந்த சில நிமிடங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்குள் சுமார் 6 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘பிகில்’ வெளியாகவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் என்ற ’விஸ்வாசம்’ சாதனையை விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி கூட்டணியின் ‘பிகில்’ முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சோகத்தில் மூழ்கிய நடிகை தேவயானி குடும்பம்

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் தான் நடிகர் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது

சேரன், வனிதாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் வனிதா, சேரன் ஆகிய இருவரையும் தர்ஷன் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய காட்சிகள் உள்ளன.

இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் காலமானார்!

ராபர்ட் ராஜசேகர் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவராகிய ராஜசேகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

27 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் நடிகர்!

கடந்த 1987ஆம் ஆண்டு அமலா நடித்த 'கவிதை பாட நேரமில்லை' மற்றும் 1992 ஆம் ஆண்டு 'மாதங்கள் ஏழு' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் யூகிசேது

'பொன்னியின் செல்வன்' பாடல்களில் வைரமுத்து செய்யப்போகும் புதுமை!

கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலான 'பொன்னியின் செல்வன்', மணிரத்னம் அவர்களால் இரண்டு பாகங்களாக திரைப்படமாகவுள்ளது.