நாளை முதல் 'விஸ்வாசம்' திருவிழா ஆரம்பம்?

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 'விஸ்வாசம்' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அனேகமாக இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம். மேலும் நாளை முதல் விஸ்வாசம்' திருவிழா தொடங்கவுள்ளதாவும் இனி அடிக்கடி 'விஸ்வாசம்' குறித்த செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் தான் சமீபத்தில் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.