close
Choose your channels

'விஸ்வரூபம் 2' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு மிகப்பெரிய தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறப்பட்டாலும் ஐந்து வருடங்கள் கழித்து தற்போதுதான் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் படங்கள் போல் 120 நிமிடங்கள் மட்டுமே அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது. இந்த இரண்டு மணி நேரத்திலும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்திவிடுவார் கமல் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம்' முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 149 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், ராகுல்போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர்கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment