close
Choose your channels

கைமாறுகிறது கமலின் விஸ்வரூபம் 2' விரைவில் ரிலீஸ்

Monday, August 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படம் பலவிதமான தடைகளை தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே நடைபெற்று வந்த போதிலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை கமல்ஹாசனே வாங்கி விரைவில் வெளியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது லைகா நிறுவனம், ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து இந்த படத்தின் உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை பாசிட்டிவ் ஆக சென்று கொண்டிருப்பதால் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தையும் லைகா நிறுவனம் கமல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகன்' படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு பாடலும் ஒருசில பேட்ச்வொர்க் மட்டுமே 'விஸ்வரூபம் 2' படத்தில் பெண்டிங் இருப்பதால் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து குணமாகியதும் இவை முடிக்கப்படும் என தெரிகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment