சசிகலாவால் ஓபிஎஸ் படும் கஷ்டத்தை நானும் அனுபவித்தேன். பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கைப்பற்ற முயற்சித்தபோது ஓபிஎஸ் அவர்கள் வெளிப்படுத்திய அரசியல் புயல் இன்னும் தமிழகத்தை சுழன்றடித்து வருகிறது. சசிகலாவின் பல சுயரூபங்களை அவர் வெளிப்படுத்தி கொண்டு வரும் நிலையில், சசிகலாவால் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது தைரியமாக பல விஷயங்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன், தன்னுடைய சொத்தை மிரட்டி சசிகலா எழுதி வாங்கியதை கூறினார் என்பதை பார்த்தோம். இதனையடுத்து பழம்பெரும் இயக்குனர் விசுவும் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தியை வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்ப்போம்.
'இப்போ தமிழ்நாட்டோட பொலிடிக்கல் சூழ்நிலை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். மிஸ்டர் பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையை நோக்கிப் போயிருக்காரு. அவருக்கு அஞ்சு மணிக்கு அப்பாயின்ட்மென்ட். அஞ்சுங்கிறதை எதுக்குச் சொல்லுவோம். பஞ்ச பூதங்களுக்குச் சொல்லுவோம். பஞ்ச பாண்டவர்களுக்குச் சொல்லுவோம். இதெல்லாம் பாசிடிவ் சைடு.
சசிகலாமாவுக்கு ஏழரை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்காங்க. ஏழரைன்னு எதுக்கு சொல்லுவோம்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.
என்னடா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஜெயா டிவிக்காக நான் மக்கள் அரங்கம்ங்கிற நிகழ்ச்சியை நடத்தினேன். முதல்ல ஒருநாள் மேடம் புரட்சித்தலைவியை பார்த்ததோட சரி. அதுக்கப்புறம் என்னை ஒருதடவைக்கூட பார்க்கவிடலை. நானும் வெளிலயும் சொல்ல முடியல.
மிஸ்டர் பன்னீர்செல்வம் எவ்ளோ கஷ்டப்பட்டாரோ இப்போ, அதே கஷ்டம்தான் எனக்கும். ஜெயலலிதாவை பார்க்கவே முடியல. இத்தனைக்கும் பப்ளிக்கை வெச்சு நான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அப்போ என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு நான் போய் சொல்லணும் இல்லையா. ஆனா சொல்லவே முடியல. யார் யார் எல்லாமோ வந்தாங்க. என்னன்னம்மோ இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தாங்க. அவர் ஆளு கொடுக்குறதை, அடுத்த ஆள் மாத்தி சொல்லுவான். இப்படித்தான் யாரோ ஒரு குடும்பமா..என்னன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. இதுக்கூட நடக்குமான்னு நீங்க யோசிக்கலாம். யோசனை பண்ணிப் பாருங்க.
மேடம் இறந்த பொழுது அவங்க பக்கத்துல யாரு நின்னாங்க. யார் யாரோ நின்னாங்க. இதேதான் அவங்க ஆட்டிடியூட். ஒருவேளை அரசாங்கத்தை அவங்க கையில ஒப்படைச்சா அங்கயும் யார் யாரோ வருவாங்க. என்னன்னம்மோ பண்ணுவாங்க. நான் இதை மக்கள்ட ஒண்ணும் கேட்க முடியாது. இந்த மக்களோட தலையெழுத்து 135 (எம்.எல்.ஏ.க்களை) பேர்கிட்ட இருக்கு. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். எங்க வாழ்க்கை உங்ககிட்ட இருக்கு. ப்ளீஸ். ப்ளீஸ். சப்போர்ட் மிஸ்டர் ஓபிஎஸ் அண்ட் டெஃபனட்லி நாட் சசிகலா"
இவ்வாறு இயக்குனர் விசு கூறியுள்ளார்.
விசு சார் கவலை இப்ப தெரியுது சதிகலா நாடகம்!! pic.twitter.com/2ZpZQ7wkJ7
— A.Megarajan (@megarajan7) February 9, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments