சசிகலாவால் ஓபிஎஸ் படும் கஷ்டத்தை நானும் அனுபவித்தேன். பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கைப்பற்ற முயற்சித்தபோது ஓபிஎஸ் அவர்கள் வெளிப்படுத்திய அரசியல் புயல் இன்னும் தமிழகத்தை சுழன்றடித்து வருகிறது. சசிகலாவின் பல சுயரூபங்களை அவர் வெளிப்படுத்தி கொண்டு வரும் நிலையில், சசிகலாவால் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது தைரியமாக பல விஷயங்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன், தன்னுடைய சொத்தை மிரட்டி சசிகலா எழுதி வாங்கியதை கூறினார் என்பதை பார்த்தோம். இதனையடுத்து பழம்பெரும் இயக்குனர் விசுவும் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தியை வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்ப்போம்.

'இப்போ தமிழ்நாட்டோட பொலிடிக்கல் சூழ்நிலை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். மிஸ்டர் பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையை நோக்கிப் போயிருக்காரு. அவருக்கு அஞ்சு மணிக்கு அப்பாயின்ட்மென்ட். அஞ்சுங்கிறதை எதுக்குச் சொல்லுவோம். பஞ்ச பூதங்களுக்குச் சொல்லுவோம். பஞ்ச பாண்டவர்களுக்குச் சொல்லுவோம். இதெல்லாம் பாசிடிவ் சைடு.

சசிகலாமாவுக்கு ஏழரை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்காங்க. ஏழரைன்னு எதுக்கு சொல்லுவோம்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.

என்னடா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க. கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஜெயா டிவிக்காக நான் மக்கள் அரங்கம்ங்கிற நிகழ்ச்சியை நடத்தினேன். முதல்ல ஒருநாள் மேடம் புரட்சித்தலைவியை பார்த்ததோட சரி. அதுக்கப்புறம் என்னை ஒருதடவைக்கூட பார்க்கவிடலை. நானும் வெளிலயும் சொல்ல முடியல.

மிஸ்டர் பன்னீர்செல்வம் எவ்ளோ கஷ்டப்பட்டாரோ இப்போ, அதே கஷ்டம்தான் எனக்கும். ஜெயலலிதாவை பார்க்கவே முடியல. இத்தனைக்கும் பப்ளிக்கை வெச்சு நான் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அப்போ என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு நான் போய் சொல்லணும் இல்லையா. ஆனா சொல்லவே முடியல. யார் யார் எல்லாமோ வந்தாங்க. என்னன்னம்மோ இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாங்க. அவர் ஆளு கொடுக்குறதை, அடுத்த ஆள் மாத்தி சொல்லுவான். இப்படித்தான் யாரோ ஒரு குடும்பமா..என்னன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. இதுக்கூட நடக்குமான்னு நீங்க யோசிக்கலாம். யோசனை பண்ணிப் பாருங்க.

மேடம் இறந்த பொழுது அவங்க பக்கத்துல யாரு நின்னாங்க. யார் யாரோ நின்னாங்க. இதேதான் அவங்க ஆட்டிடியூட். ஒருவேளை அரசாங்கத்தை அவங்க கையில ஒப்படைச்சா அங்கயும் யார் யாரோ வருவாங்க. என்னன்னம்மோ பண்ணுவாங்க. நான் இதை மக்கள்ட ஒண்ணும் கேட்க முடியாது. இந்த மக்களோட தலையெழுத்து 135 (எம்.எல்.ஏ.க்களை) பேர்கிட்ட இருக்கு. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். எங்க வாழ்க்கை உங்ககிட்ட இருக்கு. ப்ளீஸ். ப்ளீஸ். சப்போர்ட் மிஸ்டர் ஓபிஎஸ் அண்ட் டெஃபனட்லி நாட் சசிகலா"

இவ்வாறு இயக்குனர் விசு கூறியுள்ளார்.

More News

சி3 திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர். காவல்துறை அதிரடி நடவடிக்கை

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக இணையதளம் ஒன்று சவால் விட்டது...

தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஆஸ்கார் விருது நடிகை

தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் ' The Extraordinary Journey Of The Fakir' என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே...

அதிமுகவை காப்பாற்ற அதிரடி முடிவை எடுப்பேன். பிரபல நடிகை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் அவருடன் பல படங்கள் நடித்த பிரபல நடிகை லதா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசி. கட்சியில் நேரடியாக பணிபுரியவில்லை எனினும் அவ்வப்போது அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்...

சிவாஜி பேரனின் 2வது படத்தில் விஷ்ணு-மஞ்சுமா மோகன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் மகனுமான துஷ்யந்த் தயாரித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது தயாரிப்பை தொடங்கவுள்ளார்...

அதிமுக பெண் எம்.எல்.ஏ திடீர் மாயம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

ஓபிஎஸ், சசிகலா யாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தாலும் அவர் கண்டிப்பாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளது.