விசுவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

பழம்பெரும் இயக்குனர், நடிகர் விசு கடந்த மார்ச் மாதம் காலமான நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

விசு நடித்து இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தேசிய விருது, பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது விசுவின் மரணத்திற்கு பின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகடவிகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌. இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையும், பா விஜய் பாடல்களும்ம், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌. இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க திரு.ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2: திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌ பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, ‘இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌ இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை’ என்று கூறியுள்ளார்.

More News

அரபு கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்… இந்தியக் கேப்டனுக்கு குவியும் வாழ்த்துகள்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது 32 ஆவது பிறந்த நாளை துபாயில் கொண்டாடினார்.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம்… அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!!

இந்தியர்களின் பெரும் பண்டிகையான தீபாவளிக்கு மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

என் தந்தை கட்சியில் யாரும் சேர வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் நான் தான் கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று சற்றுமுன் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில்

ஹீரோ ஆகும் இன்னொரு காமெடி நடிகர்: டைட்டில் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது புதிதில்லை. நாகேஷ், கவுண்டமணியில் இருந்து விவேக், சந்தானம் வரை பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

நான் தான் அரசியல் கட்சியை பதிவு செய்தேன்: எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது