விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை தெரியுமா

  • IndiaGlitz, [Tuesday,May 24 2022]

கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஸ்மயா என்பவர் கிரண்குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமை காரணமாக விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் கணவர் கிரண்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு என்ன தண்டனை என்பது இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

டி ராஜேந்தருக்கு மாரடைப்பு: சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமா?

பிரபல இயக்குனரும் நடிகர் சிம்புவும் தந்தையுமான டி ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திடீரென தாய்லாந்து பறந்த பிரபல நடிகை… வைரலாகும் கடற்கரை புகைப்படங்கள்!

கேன்ஸ் சர்வதேத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிறகு பிரபல நடிகை ஒருவர் தாய்லாந்திற்குச் சென்று தன்னுடைய விடுமுறை

விக்ரம் பிரபு நடிக்கும் உண்மைச்சம்பவம் கதை: டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது .

காணாமல் போன பிரபல பாடகி: 12 நாட்களுக்கு சிதைந்த உடல் மீட்பு!

பிரபல பாடகி ஒருவர் கடந்த 12 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் தற்போது உடல் சிதைந்து அவருடைய பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .

நான் ஒரு கோழை, அம்மா அடிவாங்கும்போது வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகர் பேட்டி

நான் ஒரு கோழை என்றும் எனது அம்மா அடி வாங்கும் போது நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றும் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது