செம்ம டேஞ்சர் போட்டியாளர்கள் யார் யார்? கூல் சுரேஷ் - விசித்ரா கணிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கூல் சுரேஷை அனைத்து போட்டியாளர்கள் கார்னர் செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவில் விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவரும் டேஞ்சரான பிளேயர்ஸ் யார் யார் என்பது குறித்து ஆலோசனை செய்கிறார்கள். யார் டேஞ்சரான பிளேயர் என்று விசித்ரா கேட்கும் போது கூல் சுரேஷ், ‘விக்ரம் சரவணாவை கூறுவதை பார்த்து விசித்ரா ஆச்சரியப்படுகிறார். அதற்கு கூல் சுரேஷ் ‘அவன் சைலண்ட் கில்லர்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து விஜய் மற்றும் யுகேந்திரனை விசித்ரா கூறுகிறார். யுகேந்திரனுக்கு நன்றாக கேம் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார். அவர்களை அடுத்து கொஞ்சம் பிரதீப் என்று விசித்ரா கூறுகிறார்.

மேலும் பசங்களை பொருத்தவரை ஜோவிகா டேஞ்சரான பிளேயர் என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.