எங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்!!! டீலிங்க் பேசும் நாடு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பினால் உலகச் சுற்றுலாத் துறையே ஸ்தம்பித்து இருக்கிறது. கடந்த வாரத்தில் நியூசிலாந்து அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக வாரத்தின் வேலை நாட்களை 4 நாட்காளாகக் குறைக்கவும் முன்வந்தது. இப்படி உலக நாடுகள் அனைத்தும் சுற்றுலாத் துறையில் வருமானத்தை ஈட்டுவதற்காக பல்வேறு புது செயல் திட்டங்களை தீட்டி வருகின்றன. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் சுற்றுலா என்ற விஷயத்தையே முற்றிலும் மறந்தே போய்விட்டனர்.
இந்நிலையில் சைபரஸ் நாடு, தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்த அட்டகாசமான ஒரு புது யுக்தியை கையாண்டு இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாவிற்காக தனது நாட்டிற்கு வந்த பிறகு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களின் பயணச்செலவு, தங்குமிடம், உணவு, மருந்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆகும் செலவு அத்தனையையும் சைபரஸ் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். கோடை காலத்தை சிறப்பிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இவர்களது திட்டத்தைப் பயன்படுத்தி அங்கு ஊர் சுற்றிப் பார்க்கும் போது கொரோனா வந்துவிட்டால் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பத்திரமாக வீடு வந்து சேரலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சைபரஸ் நாட்டில் இதுவரை 939 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை அனைத்தும் வெளிநாட்டு பயணிகளின் தொடர்பினால் வந்தததுதான். ஆனால் கடந்த ஒருவாரமாக அந்நாட்டில் கொரோனா பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப் பட்டு இருக்கிறது. புதிய நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகப் பதிவாகி இருக்கிறது.
புதிய நோய்த்தொற்று எதுவும் இல்லாததால் இந்த தீவில் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு வரும் ஜுன் 9 ஆம் தேதி தளர்த்தப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது வரும் ஜுன் 20 ஆம் தேதி முதல் ஜெர்மனி, கிரீஸ், பின்லாந்து, நார்வே உள்ளிட்ட 13 நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. சைபரஸ், சுற்றுலாத்துறைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றால் இந்த குட்டித் தீவின் 13 விழுக்காட்டு பொருளாதாரம் சுற்றுலாத் துறையை நம்பியே இருக்கிறது. மற்ற தொழில்கள் அனைத்தும் முடக்கப் பட்ட நிலையில் உடனடியாக சுற்றுலாத் துறை மட்டுமே கைக்கொடுக்கும் என்பதால் இப்படி ஒரு அறிவிப்பை அந்நாடு வெளியிட்டு இருக்கிறது. பெரும்பாலும் இந்த தீவிற்கு ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். தற்போது அரச வெளியிட்டு உள்ள அறிக்கைக்குப் பின் இந்தத் தீவின் கடற்கரைகள் அனைத்தும் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout