இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தரும் 'விஸ்வரூப' ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற திணறி வருகிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரே வாரத்தில் சூடுபிடித்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பை அடையாதது பிக்பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்களின் ஸ்கிரிப்டின் குறையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே பார்வையாளர்கள் திருப்தி அடையும் வகையில் உள்ளது. குறிப்பாக நிகழ்ச்சியின் இடையே அவர் அவிழ்த்துவிடும் அரசியல் நையாண்டிகள், தனது திரையுலக அனுபவங்கள், போட்டியாளர்களை அவர்களே அறியாவண்ணம் கிண்டலடிக்கும் சாதுர்யம் ஆகியவை சுவாரஸ்யமானவை
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் ஒரு விஸ்வரூப ஆச்சரியத்தை தரவுள்ளார். ஆம், இன்று 'விஸ்வரூபம் 2' படத்தின் அடுத்த டிரைலர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கமல் ரசிகர்களுக்கும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கமல்ஹாசன், ராகுல்போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர்கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
விலகியது திரை! வெளிரியது வேசம்!
— Vijay Television (@vijaytelevision) July 28, 2018
வெளி வந்தது சுயரூபம்!
ஒருவரை ஒருவர் விஞ்சத் துடிக்கும் வஞ்ச விளையாட்டு!
இனிதான் ஆரம்பமோ! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/aYPQ5OumdX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments