விஸ்வரூபம் 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா தெரிவித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன்னர் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு பரிசாக தனது ரசிகர்களுக்கு இந்த படத்தின் டிரைலரை கமல் வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பை உறுதி செய்வதை போல் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரோல்லிங் சார்! கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு தொடங்கியது

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

'வடசென்னை' குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி 'வடசென்னை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: விழித்தெழு என்று கூறிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் தமிழக அரசு பல துறைகளில் செயலற்று இருப்பதை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி வந்தார்.

மீண்டும் ஒரே நாளில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

அஜித்தின் வேதாளம், விஜய்யின் மெர்சல், விஜய்சேதுபதியில் விக்ரம்வேதா உள்ளிட்ட ஒருசில படங்கள் சென்னையில் மறுவெளீயிட்டாக திரையிடப்படவுள்ளது.

நாச்சியார் தெலுங்கு ரீமேக்கில் நம்பர் ஒன் நடிகை?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் மூன்றாவது வாரமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது