'விஸ்வரூபம் 2' ஸ்டண்ட் காட்சிகள் குறித்த ஆச்சரிய செய்தி

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2' திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் #Vishwaroopam2in4days என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன்கள் விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்டண்ட் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு கமல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டார்லிங் வரலட்சுமியை பாராட்டிய விஷால், கலாய்த்த ஆர்யா

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பல ஆண்டுகள் கூறப்பட்டு வந்தபோதிலும் இருவரும் இன்னும் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.

காதல்-நட்பு: நண்பர்கள் தினத்தில் நயன்தாரா குறித்து விக்னேஷ் 

உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரிலும் பலர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

பட பூஜையில் வளைகாப்பு வைபவம்: ஒரு புதுமையான சினிமா விழா

திரைப்பட பூஜை விழா ஒன்றில் வளைகாப்பு வைபவம் நடத்தி புதுமையான பூஜை விழாவாக 'நான் செய்த குறும்பு' படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் ஆர்யாவுக்கு கிடைத்த நல்ல ஓப்பனிங் வசூல்

கடந்த சில ஆண்டுகளாக ஆர்யா நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க ஒரே ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்தார்

தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' வசூல் எப்படி?

நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான தம்பி ராமையா, தனது மகன் உமாபதியை ஹீரோவாக்கி இயக்கிய படம் 'மணியார் குடும்பம். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.