'விஸ்வரூபம் 2' ஸ்டண்ட் காட்சிகள் குறித்த ஆச்சரிய செய்தி

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2' திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் #Vishwaroopam2in4days என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன்கள் விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்டண்ட் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு கமல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.