close
Choose your channels

'விஸ்வரூபம்' பூஜா குமார் மகளா இவர்? ரசிகர்களின் ஆச்சரிய கமெண்ட்ஸ்..!

Sunday, March 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் உடன் ’விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்தில் நடித்த பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் பூஜா குமாரின் மகளா இவர்? என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு ‘காதல் ரோஜாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பிறகு இவர் பல ஆங்கில திரைப்படங்களில் நடித்த நிலையில் மீண்டும் கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி ஆனர்.

’விஸ்வரூபம்’ மற்றும் ’விஸ்வரூபம் 2’ ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன் உடன் அவர் ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூஜா குமாருக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது மூன்று வயது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment