விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் கமல் நடிப்பில் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பின்போதே இந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பும் இணைந்து நடைபெற்றது. ஒருசில காட்சிகளும் கிராபிக்ஸ் காட்சிகளும் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் மீதியுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
கமல் தற்போது 'சபாஷ் நாயுடு' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஸ்வரூபம் படத்தின் பெண்டிங் பணிகளை அவர் முடித்துவிடுவார் என்றும் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தின் கமல் ரசிகர்களுக்கு 'தூங்காவனம்' என்ற திரைவிருந்து கிடைத்ததுபோல் இந்த ஆண்டு தீபாவளிக்கு 'விஸ்வரூபம் 2' என்ற விருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிலிம்பேர் விருது-2016. சிறந்த நடிகர், நடிகை யார்? முழுவிபரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது...

'கபாலி'யின் ரகசியத்தை உடைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று உலக அளவில் பேசப்பட்டாலும் இந்த படம் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தற்செயலாக நடந்தது...

பிலிம்பேர் 2016: நான்கு விருதுகளை அள்ளி குவித்த ஷங்கரின் 'ஐ'

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது...

காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாரதிராஜா அறிமுகப்படுத்திய பல நாயகிகள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு...

சிம்பு படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'அச்சம்....