அதிரடி ஆக்சன்.. மலைக்க வைக்கும் கிராபிக்ஸ்.. சிரஞ்சீவி, த்ரிஷாவின் 'விஸ்வாம்பரா' டீசர்..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘விஸ்வாம்பரா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டீசரில் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், சிரஞ்சீவியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகியவை இருக்கும் நிலையில் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தை வசிஷ்டா இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த டீசர் வெளியாகிய சில மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ள நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விஸ்வாம்பரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்த படம் சிரஞ்சீவியின் திரை உலக வாழ்வில் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.