இயக்குனர் விஷ்ணுவர்தன் .. செம்ம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படம் குறித்த செம்ம அப்டேட்டை தெரிவித்துள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாகவும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயின் ஆகவும் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் காமரூன் பிரைசன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில், சரவணன் வசந்த் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விஷ்ணுவர்தன், சல்மான்கான் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் உருவான ஷேர்ஷா என்ற இந்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vishnuvaradhan's next.
— XB Film Creators (@XBFilmCreators) February 9, 2024
Our very own stylish & National Award Winning director #VishnuVaradhan fresh from the success of the Bollywood sleeper-hit, “Shershaah” & also known for his films, "Arinthum Ariyamalum", "Pattiyal", "Billa" & "Aarambam" is launching yet another young pic.twitter.com/x7MrtoWKXb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com