விஷ்ணுவர்தன் - அதிதி ஷங்கர் படத்தின் டைட்டில் இதுதான்: வீடியோவுடன் வெளியான அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
’குறும்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணுவர்த்தன், அதன் பின்னர் அஜித் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த ’யட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் தமிழில் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாகவும், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினியாகவும் நடித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’நேசிப்பாயா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
A journey of love challenged by destiny.
— XB Film Creators (@XBFilmCreators) June 25, 2024
We’re honoured to collaborate with National Award Winning Director @vishnu_dir on XB Creators' Production #2 titled #Nesippaya
Coming soon@_akashmurali @AditiShankarofl @realsarathkumar #PrabhuGanesan @khushsundar @kalkikanmani pic.twitter.com/wEl53YFL0w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments