விஷ்ணுவர்தன் - அதிதி ஷங்கர் படத்தின் டைட்டில் இதுதான்: வீடியோவுடன் வெளியான அறிவிப்பு..

  • IndiaGlitz, [Tuesday,June 25 2024]

ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

’குறும்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணுவர்த்தன், அதன் பின்னர் அஜித் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த ’யட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் தமிழில் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாகவும், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினியாகவும் நடித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’நேசிப்பாயா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இது 2வது சுதந்திர போர்.. காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: 'இந்தியன் 2' டிரைலர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலர்

தமிழில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கிளைமாக்ஸ்.. தெலுங்கு 'எதிர்நீச்சல்' முடிவு என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பும் இந்த வாரம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழைப் போல் இல்லாமல்

'எதிர்நீச்சல்' முடிந்ததும் சொந்த தொழில் ஆரம்பித்த நடிகை.. நெட்டிசன்கள் வாழ்த்து..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியல் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை சொந்தமாக தொழில் தொடங்கி விட்டதாக

வில்லன் நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா அதிதி ஷங்கர்?  பரபரப்பு தகவல்..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், வில்லன் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியன் 2' படம் தமிழகத்தின் கதை இல்லை.. ஷங்கர் கூறிய ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.