விஷ்ணுவின் 11வது அவதாரம் ஜெயலலிதா! சட்டசபையில் எம்.எல்.ஏ பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அவரை கடவுளுக்கு நிகராக அதிமுகவினர் பொதுமேடைகளில் பேசுவதுண்டு. அதுமட்டுமின்றி ஆதிபராசக்தி, கன்னிமேரி வடிவில் அவருக்கு கட் அவுட் வைத்து சர்ச்சைக்குள்ளான கதையும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் ஜெயலலிதாவை கடவுளுக்கு நிகராக புகழ்வதை இன்னும் அதிமுகவினர் நிறுத்தவில்லை. இன்று சட்டமன்றத்தில் பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி, ஜெயலலிதா கடவுள் விஷ்ணுவின் 11வது அவதாரம் என்று புகழாரம் சூட்டினார். மேலும் ஜெயலலிதாவுக்கு சரியான மாற்று நபர் சசிகலா தான் என்றும், அவருடைய வழிகாட்டுதலின் பேரிலேயே அதிமுக செயல்படும் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி திராவிட இனத்தின் தலைவன் தினகரன், என்றும், அவர் வழிகாட்டுதலின்படி கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் பேசினார். சசிகலாவையும் தினகரனையும் இவர் வானளவு புகழ்வதை பார்க்கும்போது ஒருவேளை தப்பித்தவறி தினகரன் முதல்வரானால் அமைச்சர்கள் பட்டியலில் மாரியப்பன் பெயர் முதலில் இருக்கும் என்று சமூகவலைத்தளத்தில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com