'மான்ஸ்டர்' இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால்?

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'ஜகஜால கில்லாடி' மற்றும் 'இன்று நேற்று நாளை 2' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் விரைவில் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

நானி, ஷராதா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்பட பலர் நடித்த தெலுங்கு படம் 'ஜெர்சி'. இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை 'மான்ஸ்டர்' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த படத்தில் நானி கேரக்டரில் நடிக்க விஷ்ணு விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 'ஜெர்சி' திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் நிஜ கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணு விஷால் 'ஜீவா' என்ற கிரிக்கெட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஜெர்சி' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்வது உறுதி செய்யப்பட்டால் அவரே தமிழ் ரீமேக்கிலும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்திலும் சமந்தா?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 

மீராவுக்கு எதிராக களமிறங்கிய 11 போட்டியாளர்கள்: என்ன செய்வார் பிக்பாஸ்?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வனிதாவுக்கு இணையாக பிரச்சனை கொடுத்து கொண்டிருப்பவர் மீராமிதுன் என்பது தெரிந்ததே. வனிதாவை வெளியேற்றிய

பிரபல இயக்குனரின் மருமகள் தயாரிக்கும் படத்தில் கீர்த்திசுரேஷ்!

கோலிவுட் திரையுலகில் விஜய், விக்ரம், விஷால், சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

புதிய கல்விக்கொள்கை: சூர்யாவுக்கு பிரபல அரசியல்வாதி ஆதரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்தாலும்

நயன்தாரா திருமணம் எப்போது? உலகக்கோப்பையை கணித்த ஜோதிடர் கருத்து!

நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தற்போது நயன்தாரா திருமணம் குறித்தும் கணித்துள்ளார்.