ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த விஷ்ணுவிஷால்: விரைவில் திருமணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஆர்யான் என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நடிகர் விஷ்ணு விஷால் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது. பிறந்த நாளின்போதும், புத்தாண்டின்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இன்று ஜூவாலாவின் பிறந்தநாள் என்பதால் இது பிறந்தநாளுக்கான பரிசு மோதிரமா? அல்லது நிச்சயதார்த்த மோதிரமா? என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Happy birthday @Guttajwala
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) September 7, 2020
New start to LIFE..
Lets be positive and work towards a better future for us,Aryan,our families,friends and people around..
Need all your love n blessings guys..#newbeginnings
thank you @basanthjain for arranging a ring in d middle of d night.. pic.twitter.com/FYAVQuZFjQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments