வருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்

  • IndiaGlitz, [Sunday,March 29 2020]

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே எப்போதும் பிஸியாக இருந்த திரை உலகினர் இதுவரை இல்லாத அளவில் தற்போது நாட்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தமிழ் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் காதலியும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து ’விஷ்ணுவிஷாலை ரொம்பவே மிஸ் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால் ’இப்போது பிரிந்து இருப்பது பரவாயில்லை. ஆனால் தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். காதலிக்கு ஆறுதல் சொன்னது மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு செய்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

More News

ராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளததை அடுத்து இந்தியர்கள் 130 கோடி பேர்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்

5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர விசயமாக வெளியூர் அல்லது வெளி மாநிலம் செல்ல விரும்புபவர்கள்

பிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இன்று ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா, தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து இருந்தார் என்பதும், தற்போது அவர் விஜய் நடித்து முடித்துள்ள

தமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

கொரோனா வைரஸை ஒழிக்க நாடு முழுவதிலும் உள்ள தொழிலதிபர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வரும் நிலையில்