விஜய் ஆண்டனியை அடுத்து விஷ்ணு விஷால் செய்த மகத்தான காரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெறாததாலும் படப்பிடிப்பு முடிந்த திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்ய முடியாமல் இருப்பதாலும் தயாரிப்பாளர்களின் முதலீட்டுக்கு வட்டி ஏறிக்கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் தயாரிப்பாளரின் கஷ்டத்தை அறிந்த நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தான் நடித்து வந்த மூன்று படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது என்பதும் அதற்கு தயாரிப்பாளர் சிவா அவர்கள் நன்றி தெரிவித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தான் நடித்து வந்த 3 திரைப்படத்தில் பணிபுரியும் கிரியேட்டிவிட்டி டீம், தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆகியோர்களுக்கு முழு சம்பளத்தையும் தனது சார்பில் வழங்கியுள்ளார். தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியுள்ள நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் கிடைக்குமா? என்ற அச்சத்தில் இருந்த நிலையில் விஷ்ணுவிஷாலின் இந்த உதவி அவர்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது என்பதும், தயாரிப்பாளர்களுக்கும் இது மிகப்பெரிய உதவி என்றும் கருதப்படுகிறது
விஷ்ணு விஷாலின் இந்த உதவி குறித்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் போல் இந்த ஊரடங்கு நேரத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து சினிமா துறையை காப்பாற்ற வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout