தோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ!

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று செல்வதற்கு ஒரு நூலிழை வாய்ப்பு இருந்தது. ஆனால் நேற்று மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்ததால் அந்த வாய்ப்பு கை நழுவி போனது.

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வந்தாலும் பிரபல தமிழ் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணிக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் சிஎஸ்கே அணிக்கே தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எத்தனை போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு அணிக்கும் ஒரு மோசமான நாட்கள், மோசமான விளையாட்டு, மோசமான தொடர் வரும் என்றும், அதனால் தோல்வி அடையும் போது அவர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

மேலும் தோல்விக்குப் பின்னர் தோனி அளித்த பேட்டியில் அவரது உறுதி வெளிப்பட்டதாகவும், தோல்வியிலும் அவர் புன்னகையுடன் இருப்பது அவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பளிக்கவில்லை என்றும், இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியது தவறும் என்றும் பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் நேற்று களமிறக்கப்பட்ட இரண்டு இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டதால், தோனி கூறியது சரியோ என்று எண்ண தோன்றுவதாக தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா?

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் தளபதி விஜய் திடீரென சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கார்த்தியின் 'சுல்தான்' படத்தின் சூப்பர் அப்டேட்!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணிகளை கார்த்தி தொடங்கி விட்டார்

தவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!!!

கொரோனாவுக்கு நடுவிலும் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.

சூரி நில மோசடி விவகாரம்: விஷ்ணுவிஷால் தந்தையின் அதிரடி நடவடிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நில மோசடி புகார் கொடுத்த தகவலை பார்த்தோம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த கபில் தேவ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.