கவுதம் மேனன் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கவுதம் மேனன் தயாரிக்கவுள்ள 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்தில் நடிக்க விஷ்ணுவிஷால் மற்றும் தமன்னா ஒப்பந்தமாகியிருந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'Pelli choopulu' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் இருந்து விஷ்ணுவிஷால் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். கால்ஷீட் தேதி காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷ்ணுவுக்கு பதில் இன்னொரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.