பிறந்த நாளில் நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்..
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாளில் அவர் தனது பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பல சமூக சேவைகளும் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!
இதன் தலைவராக திரு.சீத்தாராம் அவர்களும், செயலாளராக திரு.KV.துரை அவர்கள் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(விஷ்ணு விஷால் நற்பணி மன்ற தொடர்புக்கு : +91 7305111636 – 044 35012698)
அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தை தீட்டி வருகிறார். இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com