'பொன் ஒன்று கண்டேன்' பிரச்சனை.. வசந்த் ரவிக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் வசந்த் ரவி தான் நடித்த ’பொன் ஒன்று கண்டேன்’ என்ற திரைப்படம் திரைக்கு வரும் என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் நேரடியாக தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதை அறிந்து தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியிருந்தார்.
ஒரு திரைப்படத்தை எதில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளரின் முழு உரிமை என்றாலும் குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்து எங்களிடம் ஒரு வார்த்தை கூறி இருக்கலாம் என்றும், நாங்களே ஆன்லைனில் பார்த்து தான் இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், நான் உள்பட அனைவரும் உயிரை கொடுத்து நடித்திருந்தோம் என்றும் அதற்காக ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் என்றும் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.
வசந்த் ரவியின் இந்த பதிவுக்கு பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’எனது நண்பர்கள் வசந்த் ரவி, அசோக் செல்வன், பிரியா ஆகியோர் மீது அனுதாபமாக இருப்பதாகவும், இந்த நேரத்தில் நிறைய கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான கட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுத்தாலும் அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு மரியாதை உடன் தெரிவிக்க வேண்டும், எல்லோருக்கும் தெரியும் வகையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும், அதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்று நம்புகிறேன், இருப்பினும் இந்த பிரச்சனைகளில் இருந்து அனைவரும் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு விஷாலின் இந்த பதிவுக்கு வசந்த் ரவி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
I empathize with the #PonOndruKanden team, especially my friends @iamvasanthravi @AshokSelvan and @directorpriya_v ...
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 16, 2024
There might be a lot of questions running in the head and emotions very high at d moment..
Whatever the decision from the production house,im sure communication… https://t.co/lI1eQbYpO8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com