close
Choose your channels

'அந்த படத்தில் நான் நடிக்கவில்லை': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்..!

Wednesday, June 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படம் குறித்த தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என வதந்திக்கு விஷ்ணு விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் அவர் நடித்து முடித்த ’மோகன்தாஸ்’ என்ற திரைப்படம் விரைவில் ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’ஆர்யான்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் அடுத்து நடிக்க கூடிய படங்கள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது. அவற்றில் ஒன்று ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டதால் இந்த படம் உறுதி என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தனுஷின் 50வது திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தில் நடிக்க தனக்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் மற்ற படங்களில் கமிட்டாகி விட்டதால் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷின் ‘D50’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment