சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் சிக்கிய விஷ்ணு விஷால்.. என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் பட்டம் கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது என்றும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பொருத்தமானவர் விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், ’லியோ’ படத்தின் வெற்றி விழாவிலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘லியோ’ வெற்றி விழாவில் ’சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான்’ என்று விஜய் கூறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் குறித்த சர்ச்சை விஷ்ணு விஷாலின் சமூக வலைதள பதிவு மூலம் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவருடனும் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த விஷ்ணு விஷால், சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்கள் தான் என்று பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து ரஜினி ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில் அவர் தனது பதிவை சற்று மாற்றி உள்ளார். சூப்பர் ஸ்டார்கள் என்பதற்கு பதில் வெறும் ஸ்டார் என்று போட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, ’சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் ஒரே காரணத்திற்காக சூப்பர் ஸ்டாராக இருப்பார்கள். நான் எனது பதிவை திருத்தியதால் நான் பலவீனமானேன் என்று கூற முடியாது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் விரும்புகிறேன். எனவே என்னுடைய பதிவிற்கு எதிர்மறை கருத்துக்களை பரப்ப முயற்சிக்க வேண்டாம். நமக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஆனால் சூப்பர் ஸ்டார்கள் என் மரியாதைக்கு அப்பாற்பட்டு சாதனை படைத்தவர்கள். அனைவரையும் நேசிக்கவும், அன்பை பரப்பவும், வெறுப்பை அல்ல, கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Superstars are superstars for a reason….
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) November 16, 2023
Just caz i edited my tweet doesn make me weak…
I love everyone who is a superstar…
So all of u tryin to spread negativity on my timeline just buzz off….
There will be only one SUPERSTAR title for us…but superstars are everyone who… https://t.co/yZt06su0Nz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments