உண்மை ஒருநாள் வெல்லும்: சூரி விவகாரம் குறித்து விளக்கமளித்த விஷ்ணுவிஷால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூரியிடம் இடம் வாங்கி கொடுப்பதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் இதுகுறித்து சூரி, அடையாறு காவல்நிலையத்தில் அளித்த புகார் குறித்து வெளிவந்த தகவலை இன்று காலை ஏற்கனவே பார்த்தோம்
சூரியிடம் பணமோசடி செய்த இரண்டு நபர்களில் ஒருவர் தயாரிப்பாளர் என்றும் இன்னொருவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அந்த முன்னாள் காவல்துறை அதிகாரி பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்று சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் ’உண்மை ஒருநாள் வெல்லும்’ என்ற தலைப்பில் இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை பற்றி படித்தது மிகவும் அதிர்ச்சிகரமாக வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாக தெரிகிறது. உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தரவேண்டும். ’கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்கள் முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாக பேசுவது சரியாக இருக்காது
நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும் நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பேன்
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்
ITS EASY TO ACCUSE OTHERS
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) October 9, 2020
HARDER TO CHECK ON YOURSELF
- BLESS#MOMENTOFTRUTH#உண்மைஒருநாள்வெல்லும் pic.twitter.com/nXaV7bLM9E
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments