ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த அடுத்தடுத்த ஷாக்.. விஷ்ணுவிஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய போது, ‘ஐஸ்வர்யா அவர்கள் சமீபத்தில் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அவரை நான் நேரில் சந்தித்தபோது அவர் கூறிய ஸ்கிரிப்டை கேட்டு நான் அசந்து விட்டேன். அவ்வளவு அருமையான ஸ்கிரிப்ட். அதன்பின்னர் அவர் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறியவுடன் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
அதனை அடுத்து அவர் என்னுடைய நண்பர் விக்ராந்த் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறியதும் எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. கடைசியாக இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை என்று கூறியவுடன் நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டேன் என்று கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அவருக்கு சிறப்பு தோற்றம் என்றாலும் ஓரிரு காட்சிகளில் வந்து போகும் கேரக்டர் அவருக்கு இல்லை என்றும் மிகவும் வலுவான கேரக்டர் என்றும் படம் முழுவதும் ஆங்காங்கே அவரது கேரக்டர் வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது நண்பர் விக்ராந்துடன் இணைந்து நடிப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறிய விஷ்ணு விஷால் , இந்த படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் தான் ஏற்கனவே நடித்த கிரிக்கெட் படமான ’ஜீவா’ படத்தின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது என்றும் இது ஒரு புதுவிதமான கிரிக்கெட் படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout