மனைவி பிறந்த நாளில் விஷ்ணுவிஷால் வெளியிட்ட சூப்பர் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விஷால் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விஷ்ணுவிஷால் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதன் பின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இன்று ஜுவாலா கட்டா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த விஷ்ணுவிஷால், திருமணத்தன்று எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் விஷ்ணுவிஷால், ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் மாலை மாற்றிக் கொள்வது, தாலி கட்டுவது மற்றும் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Sharing with you all our wedding video...
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) September 7, 2021
Thank you all for the love and support so far in this journey of LIFE...@Guttajwala
Thank you 'THE STORY BOX' for the lovely video...
▶️ https://t.co/AYq80CoHGD
Happy Birthday wishes to #JwalaGutta ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments